உடல் எடைக் குறைப்பில் வினேஷ் போகத் / மருத்துவமனையில் வினேஷ் போகத் ANI
ஒலிம்பிக்ஸ்

நேற்று 49.9 கிலோ; இன்று 52.7 கிலோ: வினேஷ் போகத் எடை குறித்து குழு கருத்து!

இரவு முழுக்க உணவு எடுத்துக்கொள்ளாமல், நீர் அருந்தாமல் கடுமையாக உடற்பயிற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

DIN

வினேஷ் போகத் எடை, நேற்று இரவு 49.9 கிலோ எடையில் இருந்ததாகவும் இன்று காலையில் 52.7 கிலோ எடையில் இருந்ததாகவும், அவரின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்குப் பிறகு சிறிதளவு உணவையே எடுத்துக்கொண்டதாகவும், எனினும் அவர் எடை கூடுதலாக அதிகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

2024 ஒலிம்பிக் தொடரின் மகளிர் பிரிவு மல்யுத்தத்துக்கான இறுதிப்போட்டி இன்று (ஆக. 7) நடைபெற இருந்தது. இதில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், அமெரிக்காவின் சாரா அன் ஹில்ட்பிரான்ட் உடன் மோத இருந்தார். இறுதிப்போட்டிக்கு 50 கிலோ எடையுடன் இருக்க வேண்டும்.

இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 52 கிலோ எடையில் இருந்ததால் அவர் உடனடியாக எடையைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரவு முழுவதும் தொடர் ஓட்டம், சைக்கிளிங் என கடுமையாக உடற்பயிற்சி செய்து 1.9 கிலோ எடை குறைத்தார். 50 கிலோவுக்கு கூடுதலாக 100 கிராம் இருந்ததால், இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இரவு முழுவதும் கடுமையாக உழைத்ததோடு மட்டுமல்லாமல், 12 மணிநேரத்திற்கு தண்ணீர் உள்பட எந்தவித உணவையும் வினேஷ் எடுத்துக்கொள்ளவில்லை என அவரின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இறுதிப்போட்டி தகுதிக்கு சற்று எடை கூடுதலாக இருந்தபோது, தலைமுடியை வெட்டிக்கொண்டதாகவும், துணிகளை வெட்டி சிறிதாக்கிக்கொண்டதாகவும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா தெரிவித்தார். வினேஷ் போகத்தின் ஊட்டச்சத்து நிபுணரும் இதனை உறுதிப்படுத்தினார்.

இறுதிப்போட்டிக்காக இன்று காலை 7.15 மணிக்கு அவர் 50 கிலோ எடையில் இருக்க வேண்டும். ஆனால், அதனை விட 100 கிராம் அதிகமாக 50.1 கிலோ எடையில் இருந்தார். இதனால், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், வினேஷ் போகத் தனது காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டி நடைபெற்ற நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாளில் 49.9 கிலோ எடையில் இருந்ததாகவும், போட்டி முடிந்து சிறிதளவு உணவை உண்டதும் இந்த அளவு (52.7 கிலோ) எடை கூடியதாகவும் அவரின் குழுவினர் குறிப்பிட்டனர்.

இறுதிப் போட்டிக்காக கிட்டத்தட்ட 3 கிலோ வரை எடைக் குறைக்க வேண்டியதாயிற்று. இரவு முழுக்க உணவு எடுத்துக்கொள்ளாமல், நீர் அருந்தாமல் கடுமையாக உடற்பயிற்ச்சி செய்ததாகவும், எனினும் அவை பலனளிக்காதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வருவோருக்கு அடையாள அட்டை: பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நடைமுறை

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஆளுநா் விருதுகள் அறிவிப்பு

கரூா் சம்பவம்: 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

திருச்சி மாநகர ஊா்க்காவல் படையில் 5 திருநங்கைகள்: பணி ஆணை வழங்கல்

ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT