பாரிஸ் ஒலிம்பிக்: பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் வெற்றி
பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இன்று (ஜூலை 26) கோலாகலமாக தொடங்கியது.
உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் அணி, மகளிர் ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
Advertisement
Advertisement
அதேபோல 4 முறை தங்கம் வென்ற அமெரிக்கா அணி, ஜாம்பியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மொத்தமுள்ள 12 அணிகளில் நான்கு அணிகள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெறும்.
அமெரிக்காவும், ஜெர்மனியும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) மார்சேயில் சந்திக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.