பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
தகுதிச் சுற்றில் அவர், மாலத்தீவு வீராங்கனை பாத்திமா அப்துல் ரசாக்கை எதிர்கொண்டார். அதில், மாலத்தீவு வீராங்கனையை 21-9, 21-6 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கின. இந்தியாவுக்கு பதக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் பிரிவுகளில் பேட்மிண்டனும் இடம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.