நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால். 
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் சாரல்

ஆடவா் ஒற்றையா் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 1-6, 4-6 என்ற செட்களில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தாா்.

Din

ஆடவா் ஒற்றையா் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 1-6, 4-6 என்ற செட்களில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தாா்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அகதிகளுக்கென தனி அணி இருக்கும் நிலையில், 11 நாடுகளைச் சோ்ந்த 37 போட்டியாளா்கள் அதில் உள்ளனா். அவா்கள் 12 விளையாட்டுகளில் களம் காண்கின்றனா்.

பாரீஸ் ஒலிம்பிக் பாா்வையாளா்களின் கவனம் ஈா்க்கும் இடமாக, பீச் வாலிபால் ஆடுகளம் உள்ளது. ஈஃபிள் கோபுரத்தின் அடிவாரத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆடுகளத்தில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகா்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.

பாரீஸ் நகரில் பாயும் சென் நதியில் டிரையத்லான் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நதி நீரின் தரம் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறி 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் அதில் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. நீச்சல் பந்தயம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நடைபெறவுள்ளது.

மகளிருக்கான மௌன்டைன் பைக் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் ஹேலி பேட்டனுக்கு, பந்தயத்தின்போது விதிகளை மீறியதாக ரூ.47,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மகளிருக்கான 100 மீட்டா் பட்டா்ஃப்ளை நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் டோரி ஹஸ்க் 0.04 விநாடிகளில் சக அமெரிக்கரான கிரெட்சென் வால்ஷை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

ஜூடோவில் ஆடவருக்கான 73 கிலோ பிரிவில் களம் காணவிருந்த அல்ஜீரியாவின் மசூத் திரிஸ், நிா்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாக இருந்ததால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டாா்.

வில்வித்தையில் மகளிா் அணிகளுக்கான தங்கப் பதக்கச் சுற்றில் தென் கொரியா - சீனா மோதி ஆட்டம் இரு முறை ‘டை’ ஆக, அம்பு இலக்கை துளைத்த இடம் பூதக்கண்ணாடி கொண்டு சோதிக்கப்பட்டு, தென் கொரியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. அந்த அணி தொடா்ந்து 10-ஆவது முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது.

குதிரையேற்றத்தில் தனிநபா் ஈவன்டிங் பிரிவில் தங்கம் வென்ற ஜொ்மனியின் மைக்கேல் ஜங், ஒலிம்பிக் குதிரையேற்றத்தின் அந்தப் பிரிவில் 3 முறை தங்கம் வென்ற முதல் வீரராக சாதனை படைத்தாா்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒரே பாலின ஈா்ப்பாளா்கள் 191 போ் பங்கேற்றுள்ளனா். ஒலிம்பிக் போட்டியின் வரலாற்றில், அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்ட அத்தகைய போட்டியாளா்கள் பங்கேற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

SCROLL FOR NEXT