ஸ்பெஷல்

இலங்கை அணியில் இடம்பெற உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்: மலிங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் சங்கம் கட்டளை!

எழில்

கடந்த செப்டம்பர் மாதம் முதல் இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா இடம்பெறவில்லை. அவர் மீண்டும் இலங்கை அணியில் இடம்பெறவேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சங்கம் கட்டளையிட்டுள்ளது.

மலிங்காவை அணியில் மீண்டும் சேர்க்க தேர்வுக்குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அதற்கு உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாட வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் விரும்புகிறார்கள். ஒருவேளை மலிங்காவால் உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போனால், அவருடைய தேர்வு குறித்து தேர்வுக்குழுவினர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா தெரிவித்துள்ளார்.

ஆனால் மே 2 முதல் தொடங்கவுள்ள இலங்கை உள்ளூர் ஒருநாள் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று மலிங்கா தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக உள்ள மலிங்கா, ஐபிஎல் போட்டி முடிந்தபிறகே தான் இலங்கைக்குத் திரும்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT