ஸ்பெஷல்

அம்பட்டி ராயுடுவுக்குப் பதிலாக ரஹானேவையே நான் தேர்வு செய்திருப்பேன்: இந்திய அணித் தேர்வு குறித்து கங்குலி விமரிசனம்

எழில்

இங்கிலாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவுள்ள பல்வேறு போட்டிக்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி வரும் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, இங்கிலாந்துடன் டெஸ்ட், ஒரு நாள், டி 20 போட்டிகளில் கலந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும், அயர்லாந்துடன் இரண்டு டி 20 போட்டிகளும், இங்கிலாந்துடன் 5 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி 20 போட்டிகளிலும் இந்தியா மோதுகிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் பிசிசிஐயால் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. சென்னை ஐபிஎல் அணியில் சிறப்பாக ஆடி வரும் அம்பட்டி ராயுடு 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரஹானே நீக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணித் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியதாவது:

ரஹானேவை ஒருநாள் அணியில் சேர்க்கவில்லை. இது கடுமையான முடிவு. அம்பட்டி ராயுடுவுக்குப் பதிலாக இப்போதும் நான் ரஹானேவைத்தான் தேர்வு செய்வேன். பந்து நகரும் தன்மை கொண்ட ஆடுகளங்கள் இங்கிலாந்தில் உள்ளன. அங்கு, ரஹானே மிகவும் திறமையான வீரராகச் செயல்படுவார். இங்கிலாந்தில் ஏற்கெனவே அவர் நன்றாக விளையாடியுள்ளார். 

இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் ஸ்ரேயஸ் ஐயரைத் தேர்வு செய்தது நல்ல முடிவு. ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்டில் கருண் நாயரைத் தேர்வு செய்தது ஆச்சர்யம் அளித்தது. அந்த டெஸ்டுக்கு ஸ்ரேயஸ் ஐயரைத் தேர்வு செய்யாதது ஏன்? ஐபிஎல்-லில் தில்லி அணிக்காக அவர் பிரமாதமாக விளையாடி வருகிறாரே என்று கங்குலி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT