6 அரையிறுதிகளுடன் இந்திய அணி அரிய சாதனை!
அரையிறுதிக்கு தகுதிபெற்ற 6 ஐசிசி தொடர்களிலும் பெற்ற முடிவுகளுடன் விவரம் பின்வருமாறு...
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:55 PM
2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் செவ்வாய்கிழமை மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இதன்மூலம் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து 6 முறை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்னும் அரிய சாதனையை இந்திய அணி தன்வசப்படுத்திக் கொண்டது.
தொடர்ச்சியாக அரையிறுதிக்கு தகுதிபெற்ற 6 ஐசிசி தொடர்களிலும் பெற்ற முடிவுகளுடன் விவரம் பின்வருமாறு:
Advertisement
- 2013 சாம்பியன்ஸ் டிராஃபி (வெற்றியாளர்)
- 2014 டி20 உலகக் கோப்பை (2-ஆம் இடம்)
- 2015 உலகக் கோப்பை (அரையிறுதி)
- 2016 டி20 உலகக் கோப்பை (அரையிறுதி)
- 2017 சாம்பியன்ஸ் டிராஃபி (2-ஆம் இடம்)
- 2019 உலகக் கோப்பை (அரையிறுதிக்கு தகுதி)*