தலையில் 'பவுன்சர்' பந்து தாக்கி இறந்த ஆஸி., வீரர் ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ரூ.20 கோடி நிவாரணம்!
கிரிக்கெட் விளையாடும் போது தலையில் 'பவுன்சர்' பந்து தாக்கி இறந்த ஆஸி., வீரர் ஹியூக்ஸ் குடும்பத்துக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.20 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளது.
சிட்னி: கிரிக்கெட் விளையாடும் போது தலையில் 'பவுன்சர்' பந்து தாக்கி இறந்த ஆஸி ., வீரர் ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.20 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ். கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னியில் நடந்த முதல் தர போட்டி ஒன்றில் விளையாடும் பொழுது, சக வீரர் சீன் அபோட் வீசிய பவுன்சர் பந்து ஹியூக்ஸின் பின் தலையில் தாக்கியது. இதில் நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்த அவர், சில நாட்களில் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் கோமாவிலேயே மரணம் அடைந்தார். கிரிக்கெட் உலகையே இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிலிப்சின் மரணம் குறித்து நியூ சவுத்வேல்ஸ் மாகாண சிறப்பு விசாரணை அதிகாரி மைக்கேல் பர்னஸ் தனியாக விசாரணை நடத்தினார். அவரது விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஹியூக்சின் மறைவுக்கு சீறி வந்த பந்து குறித்த அவரது தவறான கணிப்பே காரணம்; யாரும் பொறுப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஹியூக்ஸ் மரணம் ஒரு விபத்து என்றாலும் அவரது குடும்பத்துக்கு கூடுதலான உதவி தொகையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்துக்கு ரூ.20 கோடியை நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.