செய்திகள்

தவான் விலகலால் கம்பீருக்கு மீண்டும் வாய்ப்பு!

கை விரலில் காயம் அடைந்த துவக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் தவான் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்...

DIN

கை விரலில் காயம் அடைந்த துவக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் தவான் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தூரில் நடைபெறுகிற 3-வது டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக கம்பீர் விளையாடும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் ட்ரென்ட் பவுல்ட் வீசிய பந்து தவானின் கையை பதம் பார்த்தது. மருத்துவ பரிசோதனையில் கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. மருத்துவர்கள் அவர் 15 நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். எனவே அவர் கான்பூரில்  வரும் சனிக்கிழமை துவங்க உள்ள மூன்றாவது போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தவானுக்குப் பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்தூரில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில், தொடக்க வீரர்களாக விஜய்யும் கம்பீரும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இரண்டு வருடங்கள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் கம்பீர் மீண்டும் இடம்பெற உள்ளார். 

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT