செய்திகள்

4-ஆவது இடத்திலேயே தோனி களமிறங்க வேண்டும்

DIN

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் தோனி தொடர்ந்து 4-ஆவது இடத்திலேயே களமிறங்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோனி 4-ஆவது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் நிலையில், கங்குலி மேலும் கூறியதாவது: தோனி தொடர்ந்து 4-ஆவது இடத்திலேயே களமிறங்க வேண்டும். அங்கிருந்து அவர் ஆட்டத்தை வெற்றியில் முடிக்க வேண்டும். ஆட்டத்தை வெற்றியில் முடிக்கக்கூடிய ஒரு வீரர் 40-ஆவது ஓவருக்குப் பிறகுதான் களமிறங்க வேண்டும் என்று அர்த்தமில்லை. விராட் கோலி இப்போது 3-ஆவது இடத்தில் களமிறங்கி வெற்றி தேடித்தருகிறார். ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரர் பின்வரிசையில்தான் களமிறங்க வேண்டும் என்பது தவறான உத்தியாகும். எனவே வரக்கூடிய ஆட்டங்களில் தோனி 4-ஆவது வீரராகவே களமிறங்க வேண்டும் என்றார்.
விராட் கோலி குறித்துப் பேசிய கங்குலி, "கோலி தலைசிறந்த வீரர்தான். ஆனால் அவரை மட்டுமே நம்பியிருப்பது என்பது சரியானதல்ல. நியூஸிலாந்தும் தலைசிறந்த அணிதான். அவர்களும் சில ஆட்டங்களில் வெல்லக்கூடும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT