செய்திகள்

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இந்தியாவுக்கு தங்கம்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சுபங்கார் பிரமானிக் தங்கம் வென்றார்.

DIN

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சுபங்கார் பிரமானிக் தங்கம் வென்றார்.
அஜர்பைஜானின் கெபாலா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் 50 மீ. ஏர் ரைபிள் பிரிவில் 205.5
புள்ளிகளுடன் தங்கம் வென்றார் பிரமானிக்.
செக்.குடியரசின் ஃபிலிப் நெபிஜ்சால் (205.2) வெள்ளியும், ருமேனியாவின் டிராகோமிர் (185.1) வெண்கலமும் வென்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற இந்தியர்களான மயூர் தேவா, சர்வேஷ் ஸ்வரூப் சங்கர், ஃபதே சிங் தில்லான், அஜய் நிதிஷ், சயீத் பர்வேஸ் ஆகியோர் தகுதிச்சுற்றோடு வெளியேறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாட்டு துளிகள்...

உருது மிக அழகான மொழி: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜூ

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முகாமில் முழு தகவல்களை அளிப்பது அவசியம்

கோல் இந்தியா விற்பனை ரூ.26,909 கோடியாகச் சரிவு

ஈரப் பதம் இல்லாததால் மேக விதைப்பு சோதனை ஒத்திவைப்பு: ஐஐடி கான்பூா் விளக்கம்

SCROLL FOR NEXT