செய்திகள்

டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் கம்பீர், ஜெயந்த் யாதவ்!

ராகுலுக்குப் பதிலாக, கெளதம் கம்பீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்...

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. 500-வது டெஸ்டில் வெற்றி கண்டதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. 

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ராகுல் காயமடைந்துள்ளார். இதனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக, கெளதம் கம்பீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடியதால் கம்பீர் மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்பு கடைசியாக 2014ல், இந்திய அணிக்காக விளையாடினார் கம்பீர். அதன்பிறகு விஜய், தவண், ராகுல் ஆகிய மூன்று பேருமே தொடக்க வீரர்களாக விளையாடி வருகிறார்கள். 

மேலும் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ள இஷாந்த் சர்மாவும் இரண்டாவது டெஸ்டில் விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT