செய்திகள்

நடாலை வீழ்த்தி 91-வது பட்டம் வென்றார் ஃபெடரர்!

எழில்

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடைபெற்ற  இறுதிச்சுற்றில் ரோஜர் ஃபெடரர், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மியாமி ஓபன் பட்டத்தை ஃபெடரர் 3-வது முறையாகக் கைப்பற்றியுள்ளார். 

மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் 5-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நடால், இதுவரை இங்குப் பட்டம் வென்றதில்லை. 
இந்த ஆண்டில் இவர்கள் இருவரும் மோதிய 2-வது இறுதிச் சுற்று இது. முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் ஃபெடரரும், நடாலும் மோதினர். அதிலும் ஃபெடரர்தான் வெற்றி பெற்றார். ஒட்டுமொத்தத்தில் நடாலும், ஃபெடரரும் நேருக்கு நேர் மோதிய 37-வது ஆட்டம் இது. இதில் ஃபெடரர் 14 முறையும் நடால் 23 முறையும் வென்றுள்ளார்கள். 

மியாமி பட்டம் ஃபெடரரின் 91-வது பட்டமாகும். தரவரிசையில் 4-ம் இடத்தில் இருக்கும் ஃபெடரர், முதல் இடத்தைப் பிடிக்கப் போராடுவேன் என்று கூறியுள்ளார். காயத்தினால் சில காலம் விளையாடாமல் இருந்த ஃபெடரர், இந்த வருடம் மட்டும் மூன்று பட்டங்களை வென்றுள்ளார். இந்த வருடம் விளையாடிய 20 ஆட்டங்களில் 19-ல் வெற்றிபெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT