செய்திகள்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: இறுதிச் சுற்றில் கிர்ஜியோஸ்-டிமிட்ரோவ்

DIN

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நிக் கிர்ஜியோஸ் 7-6 (3), 7-6 (4) என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரைத் தோற்கடித்தார்.
கிரிகோர் டிமிட்ரோவ் தனது அரையிறுதியில் 7-6 (4), 7-6 (10) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார்.
டிமிட்ரோவும், கிர்ஜியோஸýம் இதுவரை ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் டிமிட்ரோவ் வெற்றி கண்டுள்ளார். எனினும் கிர்ஜியோஸ் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அவர் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடித்துள்ளார். எனவே இறுதி ஆட்டம் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு சாம்பியன் வெளியேற்றம்: மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ûஸ வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னறினார்.
ஹேலப் தனது இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை சந்திக்கிறார். முகுருஸா தனது அரையிறுதியில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை தோற்கடித்தார்.
இறுதி ஆட்டத்தில் சைமோனா ஹேலப் வெல்லும்பட்சத்தில் அவர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT