முகப்பு
செய்திகள்

முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ராவுக்குக் கெளரவம் அளித்துள்ள தில்லி கிரிக்கெட் சங்கம்!

தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் இரு நுழைவாயில்களுக்கு மகளிர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ராவின் பெயர்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி தில்லியில் நாளை தொடங்குகிறது. 

இந்நிலையில், தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் இரு நுழைவாயில்களுக்கு மகளிர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. எண்கள் 3,4 நுழைவாயில்கள் அஞ்சும் சோப்ரா கேட் என இந்த டெஸ்ட் போட்டியின்போது அழைக்கப்படும். 

சமீபத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 போட்டியில் நுழைவாயில் ஒன்றுக்கு மற்றொரு தில்லி வீரரான வீரேந்திர சேவாக்கின் பெயர் வைக்கப்பட்டது. அதற்கடுத்து தற்போது இரு நுழைவாயில்களுக்கு அஞ்சும் சோப்ராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தில்லி கிரிக்கெட் மைதானத்தின் இரு தளங்களுக்கு பிஷன் சிங் பேடி, மொஹிந்தர் அமர்ந்தார் ஆகியோரின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. 

தில்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு விளையாடியுள்ளார்கள். அவர்களுக்கு தில்லி கிரிக்கெட் சங்கம் இதுபோல கெளரவிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என அஞ்சும் சோப்ரா கூறியுள்ளார். இந்திய மகளிர் அணி கேப்டனாக பணியாற்றிய சோப்ரா, ஆறு உலகக்கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.