செய்திகள்

நியூஸி.க்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 289

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 84.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த வங்கதேசத்தில் தொடக்க ஆட்டக்காரர் தமீன் இக்பால் 5 ரன்களில் வீழ்ந்தார்.
உடன் வந்த செளம்யா சர்கார் நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். மறுமுனையில் மஹ்முதுல்லா 19 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசன் செளம்யா சர்காருடன் இணைந்து சற்று நிலைத்தார்.
அவர் 9 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சபீர் ரஹ்மான் 7, நஸ்முல் ஹொஸைன் 18, ஹசன் மிராஸ் 10, டஸ்கின் அகமது 8, கம்ருல் இஸ்லாம் 2 ரன்களில் வீழ்ந்தனர்.
நூருல் ஹசன் 47 ரன்கள் எடுக்க, செளம்யா சர்கார் 11 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசி வீழ்ந்தார். இறுதியாக 84.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம்.
நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டிரென்ட் போல்ட் 4, வாக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT