முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்  இறுதி ஆட்டம்: சானியா ஜோடி தோல்வி! 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர்  இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா - இவான் டோவிக் ஜோடி தோல்வி அடைந்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:51 AM
பகிர்:

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர்  இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா - இவான் டோவிக் ஜோடி தோல்வி அடைந்தது.

ஆஸ்திகரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் கலப்பு இரட்டையர் இறுதி போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்த் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷிய வீரர் இவான் டோவிக் ஜோடியானது. அமெரிக்காவின் ஸ்பியர்ஸ், கொலம்பியாவின் செபஸ்டியன் ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பியர்ஸ்-செபஸ்டியன் ஜோடியானது 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சானியா-டோவிக் ஜோடியை வீழ்த்தி பட்டம் பெற்றது.

இந்த தோல்வியின் மூலாம்  தன்னுடைய 7 - வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை  சானியா மிர்சா  தவற விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.