சாம்பியன்ஸ் டிராபி: இலங்கை அணியின் துணை கேப்டன் உபுல் தரங்கா இரண்டு போட்டிகளுக்கு ‘சஸ்பெண்ட்’
நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்து வீச அளவுக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதால், இலங்கை அணிக்கு தாற்காலிக கேப்டனாக செயல்பட்ட துணை கேப்டன் உபுல் தரங்கா...
பர்மிங்காம்: நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்து வீச அளவுக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதால், இலங்கை அணிக்கு தாற்காலிக கேப்டனாக செயல்பட்ட துணை கேப்டன் உபுல் தரங்கா, இரண்டு போட்டிகளுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி 98 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் முழுமையான உடல் தகுதி இல்லாததால் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக துணை கேப்டனான உபூல் தரங்கா தற்காலிக கேப்டனாக பணியாற்றினார்.
இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் 50 ஓவரை வீசி முடிக்கவில்லை. இதனால் ஐ.சி.சி விதிகளின்படி, மேட்ச் நடுவர் டேவிட்பூன் வீரர்களின் நடவடிக்கைக்காக, தற்காலிக கேப்டன் உபுல் தரங்கா மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி அடுத்து வரும் 2 போட்டிகளுக்கு உபுல் தரங்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதன் விளைவாக, அடுத்து நடக்கவுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் அவரால் விளையாட இயலாது. இது இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.