முகப்பு
செய்திகள்

மந்திரா பேடிக்குப் பிறகு அதிகம் விவாதிக்கப்பட்ட மயந்தி லாங்கரின் உடை!

2003 உலகக்கோப்பையின் போது மந்திரா பேடி அணிந்த உடைகள் விவாதப்பொருளாக மாறின. அதற்குப் பிறகு...

Updated On : 5 ஜூன், 2017 at 2:39 PM
பகிர்:

ஸ்டார் டிவி தொகுப்பாளர் மயந்தி லாங்கர் பற்றி நேற்று பலரும் ஓயாது பேசினார்கள். அவரது உடையைப் பற்றிய விவாதங்கள் பலதரப்பட்ட கருத்துகளையும் மீம்களையும் சமூகவலைத்தளத்தில் உருவாக்கின. 

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் பின்னியின் மனைவியான மயந்தி லாங்கர், ஸ்டார் டிவி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக இப்பணியில் இருப்பதால் இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மயந்தி அணிந்து வந்த கவர்ச்சியான உடை சமூகவலைதளத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 2003 உலகக்கோப்பையின் போது மந்திரா பேடி அணிந்த உடைகள் விவாதப்பொருளாக மாறின. அதற்குப் பிறகு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற தொகுப்பாளரின் உடை பற்றி அதிகம் பேசப்பட்டது நேற்றுதான் என்கிற அளவுக்கு மிக அதிகமான மீம்களும் வெளிவந்தன.

Advertisement

பலர் இந்த உடைக்குக் கண்டனம் தெரிவித்தாலும் மயந்திக்கு ஆதரவும் அதிகம் இருந்தன. மழையினால் அடிக்கடி ஆட்டம் தடைபட்டதால் மயந்தியை நேற்று அதிக நேரம் நிகழ்ச்சியில் காணமுடிந்தது. இதனால் தொடர்ந்து அவரைப் பற்றிய விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் தென்பட்டன. இதனால் ட்விட்டரிலும் இந்திய அளவில் டிரெண்ட் ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.