செய்திகள்

தமிழ்நாடு பிரீமியர் லீகில் இடம்பெறவுள்ள கெளதம் கம்பீர்!

இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரரான கெளதம் கம்பீர் இடம்பெறவுள்ளார்... 

எழில்

இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரரான கெளதம் கம்பீர் இடம்பெறவுள்ளார். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் இந்த வருட டிஎன்பிஎல் போட்டியில் கெளதம் கம்பீர் பங்கேற்க உள்ளார். ஆனால் ஒரு வீரராக அல்ல, ஆலோசகராக. இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தப் போட்டியினால் இளைஞர்கள் பலர் நல்ல வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். உள்ளூர் திறமைகளுக்கு மிகவும் உதவுகிறது. டிஎன்பிஎல் போட்டியில் விளையாடி ஒரு இளைஞரின் வாய்ப்பைப் பறிக்க விரும்பவில்லை. ஆலோசகராகப் பணியாற்ற அணிகளிடம் பேசிவருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் டிஎன்பிஎல் போட்டியில் ஏதாவதொரு அணியில் ஆலோசகராகப் பணியாற்றவுள்ளார். இதுகுறித்து அவரிடம் அணிகள் பேசிவருகின்றன. அப்படி அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் முதல்முறையாக அவர் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

கோவை கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக லான்ஸ் க்ளூஸ்னரும் காரைக்குடி காளையின் பயிற்சியாளராக ராபின் சிங்கும் பணியாற்றுகிறார்கள். கடந்த வருடம் பிரெட் லீ, மைக்கேல் பவன் ஆகிய இருவரும் காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளில் பணியாற்றினார். இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரரான கெளதம் கம்பீரும் டிஎன்பிஎல் போட்டியில் இணையவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT