செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா வெற்றி

DIN

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது.

இங்கிலாந்தின் டான்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 46, கேப்டன் டெய்லர் 45, சி.என்.நேஷன் 39 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் பெர்ரி 3 விக்கெட்டுகளையும், ஜொனாசென், பீம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போல்டான் சதம்: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மூனே-போல்டான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30.1 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது. மூனே 85 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த கேப்டன் லேனிங் 12 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், போல்டான் சதமடித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 38.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. போல்டான் 116 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 107, பெர்ரி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT