செய்திகள்

சாதனை வெற்றிக்குப் பிறகு ராம்குமார் ராமநாதன் தோல்வி!

எழில்

துருக்கியில் நடைபெற்று வரும் அண்டல்யா ஓபன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் தரவரிசையில் 222-ம் இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதன், மார்கோஸ் பக்டடிஸிடம் தோல்வியடைந்தார். மார்கோஸ், 7-6, 3-6, 6-7 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.

மிகுந்த போட்டி மனப்பான்மையுடன் நடைபெற்ற இப்போட்டியில் ராம்குமார் ஐந்து மேட்ச் பாயிண்டுகளை எதிர்கொண்டார். இருப்பினும் அவரால் தோல்வியைத் தவிர்க்கமுடியவில்லை. இந்தப் போட்டி 2 மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்றது.

ஒற்றையர் போட்டிகளில் இந்திய வீரர்கள் பெரிதளவில் முன்னேற்றம் காணாத ஒரு சூழலில் ராம்குமார் அசாத்தியமான ஒரு வெற்றியைப் பெற்று கவனம் ஈர்த்தார். இப்போட்டியின் முந்தைய சுற்றில், உலக அளவில் எட்டாம் நிலையில் உள்ள டொமினிக் தீமைத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இருப்பினும் ராம்குமாரால் காலிறுதியைத் தாண்டிச் செல்லமுடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT