செய்திகள்

இலங்கையை வீழ்த்தி வரலாறு படைத்தது ஜிம்பாப்வே

DIN

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஜிம்பாப்வே.
இலங்கையின் காலே நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது. அந்த அணியில் குஷல் மென்டிஸ் 86, உபுல் தரங்கா 79*, குணதிலகா 60 ரன்கள் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் சதாரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே வெற்றி: பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக சாலமோன் மிரே 96 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். சீன் வில்லியம்ஸ் 65 ரன்களும், சிக்கந்தர் ராஸா ஆட்டமிழக்காமல் 67 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் குணரத்னே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாலமோன் மிரே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் 322 ரன்கள் குவித்து வெற்றி கண்டதன் மூலம் இலங்கை மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் மிகப்பெரிய இலக்கை துரத்தி வெற்றி கண்ட அணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது ஜிம்பாப்வே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT