முகப்பு
செய்திகள்

க்ளீன் போல்டுக்கு டிஆர்எஸ்! இலங்கை - வங்கதேச டெஸ்ட் காமெடிகள்! (வீடியோ)

இந்த டெஸ்ட் போட்டியில் பலவிதமான வினோத சம்பவங்கள் நடைபெற்றன.

Updated On : 13 மார்ச், 2017 at 6:16 PM
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை. இலங்கையின் காலே நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 457 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 197 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 59 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த டெஸ்ட் போட்டியில் பலவிதமான வினோத டிஆர்எஸ் தொடர்புடைய சம்பவங்கள் நடைபெற்றன.

வங்கதேச வீரர் சுபசிஸ் ராய், மெண்டிஸ் சிக்ஸர் அடித்ததற்கு விக்கெட் எடுத்ததுபோல கொண்டாடினார். பவுண்டரி எல்லைக்கோட்டின் வெளியே முஸ்தாஃபிசுர் கேட்ச் பிடித்தார். இதனால் அம்பயர் சிக்ஸருக்கான சைகை காண்பித்தபோது சுபசிஸ், கேட்ச் பிடித்ததாக எண்ணிக்கொண்டு தனது விக்கெட்டைக் கொண்டாடி பல்பு வாங்கினார். (பார்க்க 0.40 நொடி முதல்)

Advertisement

அடுத்ததாக, வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸில் லெக் சைடில் பந்து சென்றதாக எண்ணி தமிம் இக்பால் ரன் எடுக்க முயன்றார். ஆனால், பந்து விக்கெட் கீப்பரைத் தாண்டிச் செல்லவில்லை. இதனால் அவர் ரன் அவுட் ஆனார். (பார்க்க 7.04 நொடி முதல்)

இது மிகவும் நகைப்புக்குரியது. வங்கதேச வீரர் செளம்யா சர்கர், அசேலா குனரத்னேவின் பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். ஆனால் அவரால் என்ன நடந்தது என்று அறிந்துகொள்ளமுடியவில்லை. பந்து பேட்டிலும் படவில்லை. கால்காப்பிலும் படவில்லை. அம்பயர் அவுட் கொடுத்தவுடன் குழம்பிப் போய் டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தார். ஆனால் பிறகு தான் க்ளீன் போல்ட் ஆனதை அறிந்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். (பார்க்க 0.12 நொடி முதல்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.