முகப்பு
செய்திகள்

தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி ஜடேஜா முதலிடம்!

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஜடேஜா...

Updated On : 21 மார்ச், 2017 at 2:36 PM
பகிர்:

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஜடேஜா. அதேநேரத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஜடேஜா அற்புதமாகப் பந்துவீசி வருகிறார். சமீபகாலமாக அஸ்வினுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்திருந்த ஜடேஜா, ராஞ்சி டெஸ்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். 7 புள்ளிகள் குறைவாகப் பெற்று (862) அஸ்வின் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பேட்டிங்கில் ஸ்மித் முதலிடத்திலும் புஜாரா இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள். விராட் கோலி 4-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

Advertisement

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேத்தின் ஷகிப் அல்ஹசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனால் அஸ்வின் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஜடேஜாவுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.