செய்திகள்

ஐபிஎல்: தமிழில் வர்ணனை!

இந்த வருட ஐபிஎல் போட்டியின்போது தமிழிலும் வர்ணனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எழில்

ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் சோனி நிறுவனம் கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் தமிழ் வர்ணனைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5 முதல் மே 21 வரை நடக்கவுள்ளது. சோனி சிக்ஸ், சோனி ஈஎஸ்பின், சோனி மேக்ஸ் ஆகிய சானல்களில் ஐபிஎல் போட்டிகளில் ஒளிபரப்பாகின்றன.

சோனி சிக்ஸில் ஆங்கிலத்தில் வர்ணனை இருக்கும். தமிழ், தெலுங்கு, வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளின் வர்ணனை சோனி ஈஎஸ்பின் சானல்களில் வரும். சோனி மேக்ஸ் சானலில் ஹிந்தி வர்ணனையுடன் போட்டிகள் ஒளிபரப்பப்படும். இந்த வருடம் கன்னட மொழியில் வர்ணனை இருக்காது என்று சோனி பிக்சர்ஸ் நிறுவனம்  அறிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் 10-ஆவது ஆண்டு போட்டிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த சீசனில் 2-ஆவதாக வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இறுதி ஆட்டமும், ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

10-ஆவது ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. அட்டவணையிட்டபடி, ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும். இதில் 7 ஆட்டங்கள், அந்தந்த அணி சார்ந்த மாநிலத்தின் சொந்த மைதானத்தில் நடைபெறும். கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சீசனில் இந்தூர் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

வேளாண் அறிவியல் நிலையத்தில் சிறுதானியங்கள் கண்காட்சி

மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

SCROLL FOR NEXT