செய்திகள்

முத்தரப்பு தொடர்: வங்கதேசம் வெற்றி

DIN

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்தது வங்கதேசம்.

அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 181 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக எட் ஜாய்ஸ் 46, நியால் ஓ"பிரையன் 30 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் முஸ்தாபிஜுர் ரஹ்மான் 4 ஓவர்களில் 23 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், மஷ்ரபே மோர்ட்டஸா, சுன்ஸாமுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய வங்கதேச அணி 27.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. செளம்ய சர்க்கார் 68 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 87 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக தமிம் இக்பால் 47, சபீர் ரஹ்மான் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அயர்லாந்து தரப்பில் மெக்கர்த்தி, கெவின் ஓ"பிரையன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முஸ்தாபிஜுர் ரஹ்மான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT