செய்திகள்

2-ஆவது டி20 போட்டியில் காலின் முன்ரோ சதம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டியில் நியூஸிலாந்து வீரர் காலின் முன்ரோ சதம் விளாசினார்.

Raghavendran

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், தில்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. 

2-ஆவது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. மார்டின் கப்டில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

மற்றொரு துவக்க வீரரான காலின் முன்ரோ சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 58 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். சர்வதேச டி20 போட்டிகளில் இது அவருக்கு இரண்டாவது சதமாகும்.

இப்போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 196 ரன்கள் குவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT