முகப்பு
செய்திகள்

பயிற்சி ஆட்டம்: இலங்கை அணி சிறப்பான தொடக்கம்!

பிசிசிஐ தலைவர் லெவன் - இலங்கை அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று தொடங்கியுள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

பிசிசிஐ தலைவர் லெவன் - இலங்கை அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று தொடங்கியுள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாக மைதானத்தில் இந்த ஆட்ட நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான பிசிசிஐ தலைவர் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான சதீரா சமரவிக்ரமாவும் திமுத் கருணாரத்னேவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். சமரவிக்ரமா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். கருணாரத்னே 50 ரன்களில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். லாஹிரு திரிமானி 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 44-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து சிறப்பான முறையில் விளையாடிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.