செய்திகள்

தவன், ராகுல் அதிரடி துவக்கம்: முதல் டெஸ்டில் இந்தியா முன்னிலை

தவன், ராகுல் அதிரடி துவக்கம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை பெற்றது.

Raghavendran

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களுக்குச் சுருண்டது. சிறப்பாக ஆடிய புஜாரா 52 ரன்கள் சேர்த்தார்.

இதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹெராத் 67,  மேத்யூஸ் 52, திரிமண்ணே 51 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

122 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு தவன், ராகுல் ஜோடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தியது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தது. 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் லோகேஷ் ராகுல் 73, புஜாரா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் 49 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள காரணத்தால் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவதற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT