செய்திகள்

நிதி உதவி திரட்டுவது கடினமாக உள்ளது: யுவ்ராஜ் சிங்

எழில்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், 2012-ல் யுவிகேன் என்கிற புற்றுநோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன்மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்துவருகிறார். 

இந்நிலையில் யுவிகேன் நிறுவனத்தின் புற்றுநோய் விழிப்புணர்வு மையம் ஒன்றை ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள ஷுலினி பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளார். மேலும் இப்பல்கலைக்கழகத்தில் யுவ்ராஜ் சிங் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மைதானத்தையும் அவர் திறந்து வைத்தார். 

இந்த விழாவில் பேசிய யுவ்ராஜ் சிங், புற்றுநோய் விழிப்புணர்வுக்கு நிதி உதவி திரட்டுவது கடினமாக உள்ளது. இங்குள்ள மாணவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வில் ஈடுபடுவது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடன் இணைந்து அவர்கள் பணியாற்றவுள்ளது மனநிறைவை அளிக்கிறது. மேலும் பலரும் இணைந்து எனக்குத் தோள் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT