முகப்பு
செய்திகள்

யு-17 உலகக் கோப்பை கால்பந்து: போராடித் தோற்றது இந்தியா!

தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோற்றது... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கொலம்பியாவிடம் இந்திய அணி போராடித் தோற்றுள்ளது.

தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே (அதாவது 49-வது நிமிடத்தில்) கொலம்பிய வீரர் பீனாலோஸா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து போராடிய இந்திய அணி 82-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை ஜேக்சன் அடித்தார். இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் அடுத்த நிமிடத்திலேயே பீனாலோஸா கோலடிக்க, கொலம்பியாவின் வெற்றி உறுதியானது. இறுதியில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்திய அணிக்கு இது 2-வது தோல்வியாகும். முன்னதாக முதல் ஆட்டத்தில் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.