முகப்பு
செய்திகள்

நெ.1 பந்துவீச்சாளர்: பூம்ரா சாதனை!

சமீபகாலமாக அசத்திக்கொண்டிருக்கும் வேகப்பந்துவீச்சாளர் பூம்ரா, டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

சமீபகாலமாக அசத்திக்கொண்டிருக்கும் வேகப்பந்துவீச்சாளர் பூம்ரா, டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

ஒருநாள் தரவரிசையில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ள பூம்ரா, டி20 தரவரிசையில் பாகிஸ்தானின் இமாத் வாசிமைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசையில் முதல் 20 வீரர்களில் பூம்ராவுக்கு அடுத்ததாக அஸ்வின் 15-ம் இடத்தில் உள்ளார்.

நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில், ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 10 நாள்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸிடம் முதலிடத்தை இழந்த கோலி, நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் 263 ரன்கள் குவித்ததன் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். அதேபோல டி20 தரவரிசையிலும் விராட் கோலி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். சிறந்த பேட்ஸ்மேன்களில் முதல் 10 பேரில் கோலியைத் தவிர வேறு எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை. கோலிக்கு அடுத்ததாக லோகேஷ் ராகுல் 20-ம் இடம் பிடித்துள்ளார்.

அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் நியூஸிலாந்து!ம் 5-ம் இடத்தில் இந்தியாவும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.