முகப்பு
செய்திகள்

இந்திய அணியின் டி20 தொடர் வெற்றியால் ஆதாயம் பெறவுள்ள பாகிஸ்தான்!

இந்திய அணி 3-0 என ஜெயிக்கவேண்டும் என இந்திய ரசிகர்களை விடவும் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஆவலாக...

Updated On : 31 அக்டோபர், 2017 at 4:01 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:30 PM

நாளை முதல் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பமாகிறது. முதல் போட்டி டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் இந்திய அணி 3-0 என ஜெயிக்கவேண்டும் என இந்திய ரசிகர்களை விடவும் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

விஷயம் இதுதான். டி20யில் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் நியூஸிலாந்தும் 5-ம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. டி20 தொடரை இந்திய அணி 3-0 என வென்றால் அதிகபட்சமாக 2-ம் இடத்துக்கு முன்னேறமுடியும். அப்படித் தோற்கும்போது முதலிடத்தில் உள்ள நியூஸிலாந்து அணி, 5-ம் இடத்துக்கு இறங்கிவிடும்.

Advertisement

இதனால் லாபம் பாகிஸ்தானுக்குத்தான். தற்போது தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள பாகிஸ்தான், இந்திய அணி டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்தினால் முதலிடத்தைப் பிடித்துவிடும். அட, 3-0 கூட வேண்டாம். 2-1 என இந்திய அணி ஜெயித்தால் கூட பாகிஸ்தான் முதலிடத்தை அடைந்துவிடும். ஆக, பாகிஸ்தான் டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க, இந்திய அணி தொடரை வென்றாகவேண்டும். ஒருவேளை தொடரை நியூஸிலாந்து அணி வென்றால், முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.