செய்திகள்

பாட்மிண்டன் தரவரிசை: சாய்னா, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

DIN

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது பிரிவில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் 16-ஆவது இடத்தில் இருந்த சாய்னா, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதை அடுத்து 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 12-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அதே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தரவரிசையில் ஏற்கெனவே இருந்த 4-ஆவது இடத்திலேயே நீடிக்கிறார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி வரை முன்னேறிய ஸ்ரீகாந்த், 2 இடங்கள் ஏற்றம் கண்டு 8-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இந்தியாவின் அஜய் ஜெயராம் ஓரிடம் முன்னேறி 16-ஆவது இடத்துக்கும், சாய் பிரணீத் 2 இடம் முன்னேறி 17-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் பட்டம் வென்ற ஹெச்.எஸ்.பிரணாய் 3 இடங்கள் சறுக்கி, 18-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி ஓரிடம் முன்னேறி 19-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவில், அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 24-ஆவது இடத்தில் நீடிக்கிறது. ஆடவர் இரட்டையர் முதல் 25 இடங்களுக்குள் இந்திய ஜோடி எதுவும் இடம்பெறவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பால் மரணம்

SCROLL FOR NEXT