செய்திகள்

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்: ரூ.16,347 கோடிக்கு ஏலம்

DIN

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2018-2022) ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு வாங்கியுள்ளது.

முன்னதாக, ஐபிஎல் போட்டியை தொலைக்காட்சிகளில் மட்டும் 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை கடந்த 2008-ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சி நிறுவனம் ரூ.8,200 கோடி கொடுத்து வாங்கியிருந்தது.
தற்போது ஸ்டார் இந்தியா ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியுள்ள தொகையின்படி, 5 ஆண்டுகளிலேயே மேற்கண்ட தொகையின் இரட்டிப்பு மதிப்பை பிசிசிஐ வருமானமாக பெற்றுவிடும். அதாவது ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் பிசிசிஐக்கு சராசரியாக ஆண்டுதோறும் ரூ.3,270 கோடி வருவாயாக கிடைக்கவுள்ளது.
இந்திய அணி விளையாடும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் பிசிசிஐக்கு ரூ.43 கோடி மட்டுமே வருவாயாக கிடைக்கும் நிலையில், ஐபிஎல் போட்டியின் ஒரு ஆட்டத்தின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் ரூ.55 கோடி வருவாயாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உரிமத்தை ஏலத்தில் எடுத்துள்ளதன் மூலம், ஸ்டார் இந்தியா நிறுவனமானது இந்தியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப அதிகாரம் பெற்றுள்ளது. தொலைக்காட்சியில் மட்டுமல்லாது, செல்லிடப்பேசி செயலிகள், இணைதளம் ஆகியவற்றின் வழியேவும் ஐபிஎல் போட்டியை வழங்க இயலும்.
முன்பு இந்த ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்த சோனி நிறுவனம், இந்த முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமத்துக்கு மட்டும் ரூ.11,050 கோடிக்கு ஏலம் கோரியிருந்தது. ஆனால், அந்த உரிமத்துக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.6,196 கோடிக்கு மட்டுமே ஏலம் கோரியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT