முகப்பு
செய்திகள்

2-வது டெஸ்ட்: லயன் 7 விக்கெட்டுகள்; வங்கதேசம் 305 ரன்கள்!

305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம். முஷ்ஃபிகர் ரஹீம் 68, சபீர் ரஹ்மான் 66 ரன்கள் எடுத்தார்கள்.... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் 305 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவின் லயன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரு அணிகளுக்கு இடையே சிட்டகாங்கில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. முதல் நாள் ஆட்டம் முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேசம். முஷ்ஃபிகர் ரஹீம் 62, நாசிர் ஹுசைன் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 113.2 ஓவர்களில் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம். முஷ்ஃபிகர் ரஹீம் 68, சபீர் ரஹ்மான் 66 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியத் தரப்பில், நாதன் லயன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பிறகு ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. கேப்டன் ஸ்மித் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.