முகப்பு
செய்திகள்

விராத் கோலி இடது கை பேட்ஸ்மேன் ஆன கதை தெரியுமா? (விடியோ இணைப்பு) 

வலது கை பேட்ஸ்மேனான இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி, விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் இடது கையில் பேட்டிங் செய்து சிக்ஸர் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

Updated On : 6 செப்டம்பர், 2017 at 8:44 PM
பகிர்:

கொழும்பு: வலது கை பேட்ஸ்மேனான இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி, விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் இடது கையில் பேட்டிங் செய்து சிக்ஸர் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.     

இந்திய கிரிக்கெட் அணித் தலைவராக இருக்கும் விராட் கோலி வலது கை  பேட்ஸ்மேன் ஆவார்.  உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

களத்தில் விளையாடும் பொழுது கூட பெரும்பாலான சமயம் இடது கை பேட்ஸ்மேனாக திரும்பி நின்று  'ரிவர்ஸ் ஸ்வீப்' உள்ளிட்ட ஷாட்களை ஆட மாட்டார். வெகுசில சமயங்களில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்வது உண்டு.

Advertisement

தற்பொழுது இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. நடந்து முடிந்த  இலங்கைக்கு எதிரான 4-வது மற்றும் ஐந்தாவது போட்டிக்கு இடைப்பட்ட ஓய்வு நாளில் கோலி விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் நடித்துள்ளார்.

இதற்கான ஒளிப்பதிவின் பொழுது இலங்கை தெரு வீதி ஒன்றில் ஜாலியாகி கிரிக்கெட் விளையாடும் பொழுது,  விராட் கோலி இடது கை பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்யும் காட்சி ஒன்று வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோலி, 'இடது கை ஷாட் மிகவும் மோசமில்லை’’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

விடியோ: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.