முகப்பு
செய்திகள்

மனைவியின் விருப்பத்துக்காக 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாட சாஹா ஆர்வம்!

நான் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பதற்காக அவர் எனக்கு உந்துதல் கொடுத்து வருகிறார்.... 

செய்திகள்

மனைவியின் விருப்பத்துக்காக 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாட சாஹா ஆர்வம்!

நான் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பதற்காக அவர் எனக்கு உந்துதல் கொடுத்து வருகிறார்.... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்று தோனி பிரியப்படுகிறார். சமீபத்திய இலங்கையுடனான ஒருநாள் தொடரின்போது சிறப்பாக விளையாடி தன் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளார். இப்போது தோனியின் பேட்டிங் திறமை மீது யாருக்கும் சந்தேகமில்லை. தோனியின் இடத்துக்குப் போட்டியில்லை என்றுதான் சொல்லவேண்டும். 

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது சாஹாவும் போட்டியில் குதித்துள்ளார். 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாட விருப்பப்படுகிறேன் என்று கூறியுள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹா. 

நான் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் எனது மனைவி ரூமி தீவிரமாக இருக்கிறார். நான் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பதற்காக அவர் எனக்கு உந்துதல் கொடுத்து வருகிறார். நானும் முயற்சித்து வருகிறேன். எனினும் இறுதி முடிவு தேர்வுக் குழுவினரின் கையில்தான் உள்ளது என சாஹா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொடருக்குப் பிறகு தோனி சற்று நம்பிக்கையுடன் இருப்பார் என்று பார்த்தால் சாஹாவும் போட்டிக்கு வந்துவிட்டார். தோனி அணியில் இருக்கும்போது சாஹாவுக்கு வாய்ப்பில்லை. அப்படியே மாற்று கீப்பர் தேவை என்றால் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் என்று அதற்கும் வீரர்கள் தயாராக உள்ளார். இந்நிலையில் சாஹா மனைவியின் கனவு எப்படி நிறைவேறப் போகிறது?

முழு கட்டுரையைப் படிக்க →