முகப்பு
செய்திகள்

கார் டயர் வெடித்தது: காயமின்றி உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா!

காவல்துறை ரெய்னாவுக்கு மற்றொரு காரை ஏற்பாடு செய்து தந்தது. அதில் கான்பூருக்குப் புறப்பட்டு...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

துலீப் டிராபி போட்டியில் இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக உள்ளார் கிரிக்கெட் வீரர் ரெய்னா.

கான்பூரில் நடைபெறும் துலீப் டிராபி போட்டியில் கலந்துகொள்வதற்காக காசியாபாத்திலிருந்து கான்பூருக்கு தன்னுடைய சொகுசு காரில் நேற்று வந்துகொண்டிருந்தார். 

இந்நிலையில் காலை 2 மணியளவில் எட்டாவா என்ற இடத்தின் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகக் காயம் எதுவுமின்றி சுரேஷ் ரெய்னா உயிர் தப்பினார்.

அதிகாலை வேளையில் ரெய்னாவுக்கு உதவ வந்தவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்கள். பிறகு காவல்துறை ரெய்னாவுக்கு மற்றொரு காரை ஏற்பாடு செய்து தந்தது. அதில் கான்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார் ரெய்னா.

முழு கட்டுரையைப் படிக்க →