முகப்பு
செய்திகள்

ஸ்மித்துக்குப் பிடித்த இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோலிக்கு இடமில்லை!

கோலி, தோனி, கவாஸ்கர், டிராவிட், கங்குலி போன்ற பெயர்களில் இருந்து ஒரு பெயரைச் சொல்வார் என்று பார்த்தால்...

Updated On : 21 செப்டம்பர், 2017 at 12:02 PM
பகிர்:

உங்களுக்குப் பிடித்த இரு இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார்? உங்கள் கனவு இந்திய அணியில் யார் யாருக்கெல்லாம் இடம் தருவீர்கள்?

இந்தக் கேள்விக்கு முதலில் ஒருவர் பெயரைச் சொல்கிறார் ஸ்மித்.

சச்சின். 

Advertisement

அடுத்ததாக கோலி, தோனி, கவாஸ்கர், டிராவிட், கங்குலி போன்ற பெயர்களில் இருந்து ஒரு பெயரைச் சொல்வார் என்று பார்த்தால் அவரிடமிருந்து இப்படிப் பதில் வருகிறது.

ஹர்பஜன் சிங்!

ஆம். சச்சினும் ஹர்பஜனும் தான் ஸ்மித்துக்குப் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களாம். அவருடைய கனவு அணியில் இவ்விரு இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடமுள்ளது.

விராட் கோலியுடனான போட்டி குறித்துக் கூறிய ஸ்மித், விராட் மிகச்சிறந்த வீரர் மற்றும் கேப்டன். இந்திய அணிக்காக அவர் பல மகத்தான காரியங்களைச் செய்துள்ளார். விராட் கோலியின் வரவுக்குப் பிறகு இந்திய அணியின் உடற்தகுதியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். 

இன்று, ஈடன் கார்டன்ஸில் தனது 100-வது ஒருநாள் போட்டியை விளையாடவுள்ளார் ஸ்மித்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.