செய்திகள்

அணியிலிருந்து மேக்ஸ்வெல்லை நீக்கியது ஏன்?: ஆஸி. முன்னாள் வீரர்கள் கேள்வி!

எழில்

பெங்களூர் ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல் இடம்பெறாததற்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் இன்று நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப், பூம்ரா, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல், ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட், ஆடம் ஸம்பா இடம்பெற்றுள்ளார்கள். மேக்ஸ்வெல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அகர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

முதல் மூன்று போட்டிகளில் 39, 14, 5 என குறைவான ரன்கள் எடுத்ததால் மேக்ஸ்வெல்லை அணியிலிருந்து நீக்கியுள்ளார்கள்.

இந்நிலையில் பெங்களூர் ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்ல்லை நீக்கியது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இந்த விவகாரம் குறித்து ஆஸி. வீரர் பிராட் ஹாட்ஜ் ட்விட்டரில் கூறியதாவது: பெங்களூரில் மேக்ஸ்வெல்லை ஏன் என்னால் பார்க்கமுடியவில்லை. இதற்கான சரியான காரணத்தை யாராவது எனக்குச் சொல்லமுடியுமா என்ரு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்த முடிவு குறித்து கூறியதாவது: தொடரை இழந்த நிலையில் கடைசி இரு போட்டிகள் மூலமாக அணியுடன் எந்தளவுக்குப் பொருந்தியுள்ளோம் என்பதை மேக்ஸ்வெல் அறிய சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். இவ்விரு போட்டிகளிலும் மேக்ஸ்வெல்லை மூன்றாவது நிலையில் களமிறக்கியிருக்க வேண்டும். கடைசி இரு போட்டிகளில் பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டால் வேறு மாதிரியான முடிவை எதிர்கொள்ளவேண்டும் என்பதை அவருக்குப் புரியவைத்திருக்கவேண்டும். மேக்ஸ்வெல்லின் திறமையை வெளிக்கொணர தலைமைப் பொறுப்பில் உள்ளவர் முயற்சி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT