முகப்பு
செய்திகள்

சென்னை உதயம் திரையரங்கில் ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்ப அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஆட்டங்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் ஒளிபரப்ப...

செய்திகள்

சென்னை உதயம் திரையரங்கில் ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்ப அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஆட்டங்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் ஒளிபரப்ப...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:39 PM
பகிர்:

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

இதையடுத்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதனால் உண்டான நஷ்டத்தை ஈடுகட்ட ஐபிஎல் ஆட்டங்களைத் தங்களது திரையரங்கில் ஒளிபரப்ப சென்னை உதயம் திரையரங்கம் முடிவு செய்துள்ளது. ஏப். 7 முதல் மே 27 வரையிலான ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும் என்று சென்னை காவல் ஆணையருக்கு உதயம் திரையரங்க நிர்வாகம் மனு அளித்துள்ளது. உதயம் திரையரங்கில் ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்ப அப்போட்டியைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனமும் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஆட்டங்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் ஒளிபரப்பத் திரையரங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டணம் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. பெரிய திரையில் ஐபிஎல் ஆட்டங்களைப் பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும் என்பதால் இதற்கு கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும் என்று உதயம் திரையரங்க நிர்வாகம் எண்ணியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →