400-வது ஐபிஎல் போட்டி, விக்கெட்: பொல்லார்ட், பிராவோ சாதனை
400-வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்று பொல்லார்டும், 400-வது விக்கெட்டை வீழ்த்தி பிராவோவும் சாதனை படைத்துள்ளனர்.
400-வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்று பொல்லார்டும், 400-வது விக்கெட்டை வீழ்த்தி பிராவோவும் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் டிவைன் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.
அவரது சக மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும், மும்பை இண்டியன்ஸ் அணி வீரருமான பொல்லார்ட் 400 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் இருவரும் தங்கள் உடையில் 400 எண்ணை குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக பிராவோ கூறியதாவது: இது தனிப்பட்ட முறையில் இருவருக்கும் பெரிய மைல்கல்லாகும். 400 ஆட்டங்கள் விளையாடுவதற்கான உடல் தகுதியை தக்க வைத்தலே பெரிய விஷயம் எனத் தெரிவித்தார்.