செய்திகள்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

DIN

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நடப்பு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நோஸோமி ஓகுஹாராவை எதிர்கொண்டார்.

இதில், பி.வி.சிந்து 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் ஓகுஹாராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அவர் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பி.வி.சிந்து மற்றொரு ஜப்பான் வீராங்கனையான அகான் யமாகுச்சியை எதிர்கொள்ளவுள்ளார். 

  • அரையிறுதியில் எதிர்கொள்ளும் யமாகுச்சியிடம் கடந்த ஆண்டு நடைபெற்ற துபை சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளார். 
  • அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், தொடர்ந்து 2-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பெருமையை பெறுவார். 
  • இதற்கு முன் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து 2 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT