முகப்பு
செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்ட்: சீட்டுக்கட்டுகள் போல சரிந்த இந்திய அணியின் விக்கெட்டுகள்! (விடியோ)

இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு மளமளவென வீழ்ந்த நிலையில் அஸ்வின் மட்டும் 4 பவுண்டரிகள் உள்பட 29 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 20 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டம், முதல் நாளில் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.  இந்நிலையில், 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச தீர்மானித்தது.

இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. அஸ்வின் 29 ரன்களுக்கு வெளியேற, கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார் இஷாந்த். ஷமி 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5, கிறிஸ் வோக்ஸ் 2, சாம் கரன், ஸ்டூவர்ட் பிராட் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். இந்திய இன்னிங்ஸோடு 2-ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments