செய்திகள்

நாளை தொடங்குகிறது ஆசியாவின் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழா: 18-ஆவது ஆசியப் போட்டிகள்

DIN


ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 18-ஆவதுஆசியப் போட்டிகள் வரும் சனிக்கிழமை இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் தொடங்குகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து உலகின் பெரிய விளையாட்டு விழாவான ஆசியப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. முதல் போட்டி கடந்த 1951-இல் புதுதில்லியில் நடைபெற்றது. 17-ஆவது ஆசியப் போட்டி கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 18-ஆவது ஆசியப் போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடக்கின்றன. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள், அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். 40 விளையாட்டுகளில் பதக்கங்கள் வெல்வதற்காக தங்கள் திறமையை நிரூபிக்க உள்ளனர்.
இந்தியா சார்பில் 524 வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் குழு பங்கேற்கிறது. மொத்தம் 36 விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த 2014 இன்சியான் ஆசியப் போட்டியில் மொத்தம் 541 பேர் கொண்ட அணி பங்கேற்றிருந்தது.
போட்டிகள் தொடக்க விழா ஜகார்த்தாவில் உள்ள ஜெலரோ பங் கர்னோ விளையாட்டரங்கில் நடக்கிறது. இரண்டாம் முறையாக இந்தோனேஷியா ஆசியப் போட்டிகளை நடத்துகிறது. 
இரவு 7 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. 7.45 மணிக்கு வீரர்கள் அணிவகுப்பு, 8.45 மணிக்கு விழாவை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், லேசர் காட்சிகள் நடக்கின்றன. இரவு 10 மணிக்கு விழா நிறைவடைகிறது. 4000 கலைஞர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 

பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள்
மல்யுத்தம்: ஆடவர் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா, சுஷில்குமார், மகளிர் 50 கிலோ பிரிவில் வினேஷ் போகட்.
பாட்மிண்டன்: பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஆடவர் பிரிவில் கே.ஸ்ரீகாந்த்.
துப்பாக்கி சுடுதல்: இளம் வீராங்கனை மனு பேக்கர்.
தடகளம்: ஹிமா தாஸ் (மகளிர் 400 மீ.), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), சீமா புனியா (மகளிர் குண்டு எறிதல்), டுட்டி சந்த் (மகளிர் 100 மீ, 200 மீ).
டென்னிஸ்: ரோஹன் போபண்ணா-டிவிஜ் சரண் (இரட்டையர்), ராம்குமார் ராமநாதன் (ஆடவர் ஒற்றையர்).
குத்துச்சண்டை: விகாஸ் கிருஷண் (75 கிலோ), சிவ தாப்பா (60 கிலோ), சோனியா லேதர் (மகளிர் 57 கிலோ).
ஜிம்னாஸ்டிக்ஸ்: தீபா கர்மாகர்.
டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா (மகளிர் ஒற்றையர்).
வில்வித்தை: அபிஷேக் வர்மா, தீபிகா குமாரி, ஜோதி சுரேகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT