முகப்பு
செய்திகள்

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

3 மற்றும் 4-ஆவது டெஸ்ட் போட்டிகளுக்கான 19 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. 

Updated On : 17 டிசம்பர், 2018 at 6:59 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 11:24 PM

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்று வரும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இந்நிலையில், 3 மற்றும் 4-ஆவது டெஸ்ட் போட்டிகளுக்கான 19 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

Advertisement

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடித்திருந்த இளம் நட்சத்திர வீரர் பிருத்வி ஷா காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், பார்திவ் படேல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹார்திக் பாண்டியா, மயங்க் அகர்வால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.