செய்திகள்

ஐபிஎல் 2019: ரூ. 8.40 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்!

இளம் தமிழக வீரர் ரூ. 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Raghavendran

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் இளம் தமிழக வீரர் ரூ. 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவர், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூர் தொடர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை குவித்து வருகிறார்.

இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் ரூ.20 லட்சம் மட்டுமே அடிப்படை விலையாகக் கொண்டிருந்த வருண் சக்ரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி  ரூ. 8.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி இந்திய வீரர் அஸ்வின், பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும். அஸ்வின் அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமையும். நான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT