செய்திகள்

ரூ. 160 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்தாவிட்டால் உலகக் கோப்பையை நடத்த முடியாது: இந்தியாவுக்கு ஐசிசி எச்சரிக்கை

எழில்

டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான ரூ. 160 கோடியைச் செலுத்தாவிட்டால் 2023 உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

2016 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. அப்போது போட்டிகளை ஒளிபரப்ப இந்திய அரசாங்கம் வரிச்சலுகை எதுவும் வழங்கவில்லை. இதனால் போட்டியை ஒளிபரப்பிய ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் வரிகள் அனைத்தையும் கழித்துக்கொண்டு மீதித்தொகையை ஐசிசியிடம் வழங்கியது. 

இந்நிலையில் ரூ. 160 கோடி நிலுவைத்தொகையை ஐசிசிக்கு பிசிசிஐ செலுத்தவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான ரூ. 160 கோடியைச் செலுத்தாவிட்டால் 2021 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2023 உலகக் கோப்பை ஆகிய முக்கியமான போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT